மோடியை ஓபிஎஸ் ஏன் சந்தித்தார்.. எனக்குத் தெரியாது.. பொன். ராதாகிருஷ்ணன் கிரேட் எஸ்கேப்
பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஏன் சந்தித்தார் என தனக்கு தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை; பிரதமர் மோடியை எதற்காக சந்தித்தார் என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழக மக்கள் பிரச்சனை குறித்து மனு கொடுத்ததாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதற்கு, விவசாயிகளை சந்திக்க முடியாத பிரதமர் மோடி, ஓபிஎஸ்ஸை மட்டும் எப்படி சந்தித்தார். அதற்கான காரணம் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தெரியாது
மதுரைக்கு சென்றுள்ள மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், பிரதமர் மோடியை ஓபிஎஸ் ஏன், எதற்காக சந்தித்தார் என்பது குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார்.

காரணம்
மேலும், பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்க உரிய காரணங்கள் இருந்திருக்கலாம். அந்த வகையில் அவர் ஓபிஎஸ்ஸை சந்தித்திருக்கலாம் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறி எஸ்கேப் ஆனார்.

3400 கோடி
இரட்டை ரயில் மற்றும் மின் மயமாக்கப்பட்ட வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக 3400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மீனவர் பிரச்சனை
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது ஏற்படும் பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. 100 கோடி ரூபாய் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications