என் உறவினர்கள் சிலருக்கு தான் மதுபான ஆலைகளில் பங்குகள் உள்ளது: டி.ஆர்.பாலு
சென்னை: திமுகவினர் மதுபான ஆலைகள் நடத்துவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
தமிழகத்தில் பூரண மது விலக்குக்கு ஆதரவாக திமுக போராட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திமுகவினர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

சில நாளிதழ்களிலும், திமுக முக்கிய புள்ளிகள், கருணாநிதியின் வாரிசுகள் மதுபான ஆலைகள் நடத்துவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த முக்கிய புள்ளிகளில் ஒருவர் டி.ஆர்.பாலு என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், டி.ஆர்.பாலு இன்று, கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மதுபான ஆலைகளை திமுகவினர் நடத்துவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. மதுபானக்கடை லைசென்சுகளும் திமுக நிர்வாகிகளிடம் கிடையாது.
எங்களுடைய உறவினர்கள் சிலருக்கு மதுபான ஆலைகளில் பங்குகள் உள்ளது உண்மை. தமிழகத்தில் பூரண மது விலக்கு அமலுக்கு வந்தால், அந்த பங்குகளை திருப்பித்தர தயாராக உள்ளோம். இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இருதினங்கள் முன்பு திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் இதே கேள்வியை நிருபர்கள் கேட்டதற்கு "மதுவிலக்கு அமலுக்கு வந்தால், தானாக திமுகவினர் நடத்தும் ஆலைகளும் மூடப்படும். விமர்சனம் செய்வோருக்கு இந்த 'காமன் சென்ஸ்' கூட கிடையாதா" என்று பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications