விஜய் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீங்க? நடிகர் விமல் பதிலால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்னாச்சு?
திருச்செந்தூர்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார். 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் அவர் கட்சி தொடங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு நடிகர் விமல் சொன்ன பதில் என்பது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் விமலை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அவர் அறிவித்தார். ஆனாலும் வரும் 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார்.

அதன்படி தற்போது நடிகர் விஜய் கட்சிக்கு நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கட்சியின் கொடி உருவாக்கம் மற்றும் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தீவிரம் காட்டி வருகிறார். மதுரை, திருச்சியில் மாநாட்டுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில் நடிகர் விஜய் சேலத்தில் மாநாடு நடத்துவதற்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக நீட் தேர்வு தேவையில்லாதது என்று விஜய் கூறியதற்கு பாஜகவினர் விமர்சனம் செய்யும் நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி என்பது மாநில அரசின் தோல்வி என தெரிவித்ததற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் திரைத்துறையினரும் நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் விமல் கூறிய கருத்து என்பது தற்போது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
அதாவது நடிகர் விமல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமாவில் சில காலங்களாக விமலின் புதிய திரைப்படங்கள் வரவில்லை. தற்போது அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். போகுமிடம் வெகு தூரம் இல்லை, தேசிங்குராஜா 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இதில் ‛ போகுமிடம் வெகு தூரம் இல்லை' எனும் படத்தின் படப்படிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வரும் நிலையில் தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்து வெளியே வந்த விமலிடம் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர். அதன்பிறகு நடிகர் விமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம், நடிகர் தனுஷ் படம் எடுப்பதற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விமல், "அது குறித்து எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரிகிறது" எனப் பதிலளித்தார்.
அதன்பிறகு, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று அடுத்ததாக கேள்வி எழுப்பப்பட்டது. அதனை கேட்டவுடன் சிரித்த நடிகர் விமல், ‛‛தெரியலைங்க'' என பதிலளித்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதை அறியாமல் நடிகர் விமல் மாற்று கிரகத்தில் இருக்கிறாரா? என்று விஜய் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் தற்போது ஹீரோவாக நடித்து வரும் விமல் நடிகர் விஜயின் கில்லி திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் விஜய்க்கு நிறைய நண்பர்கள் இருப்பார். அதில் ஒருவராக விமல் இடம்பெற்று இருப்பார். இத்தகைய சூழலில்தான் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது பற்றிய கேள்விக்கு தெரியலைங்க என விமல் பதில் சொல்லி உள்ளார்.
-
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா? -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications