இலங்கைக்கு எதிரான யு.எஸ்.தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்
சென்னை: ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தக் கோரி ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனால் சீனா, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பிலேயே கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்பது மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவல்ல.
தீர்மானம் குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் முடிவு எடுத்திருக்கக் கூடும். தமிழக அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால், இதுபோன்ற தீர்மானத்தை ஆதரிக்க இயலவில்லை.
காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக கருணாநிதி கூறி இருப்பது ஆச்சரியமளிக்கிறது. மதச்சார்பற்ற அணி அமையும்போது காங்கிரசை தி.மு.க. ஆதரித்தால் வரவேற்போம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications