எனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு.க.ஸ்டாலின் பரபரப்புப் பேச்சு
சென்னை: வைகோவிற்கும் தனக்கும் எப்போதுமே கருத்து வேறுபாடு ஏற்பட்டது இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்காலத்தில் மெகா கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றிர்க்கு பேட்டியளித்த ஸ்டாலின், தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு மாற்று நாங்கள்தான் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள். அவர்களது இந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பா.ஜ.க.வால் வெற்றி பெற இயலாது என்றார்.

தளர்ச்சியில் பாஜக
முன்பு தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த போது பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த தேர்தலில் தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் அவர்களால் ஒரு இடத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. எனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சி பெறவில்லை. தளர்ச்சிதான் பெற்றுள்ளது.

வைகோ உடன் நட்பு
வைகோவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. தி.மு.க.வில் தன்னை புறக்கணிப்பதாக கூறிதான் அவர் தி.மு.க.வில் இருந்து விலகிச்சென்று ம.தி.மு.க.வைத் தொடங்கினார்.

கருணாநிதி சந்திப்பு
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்ட போது எங்கள் தலைவர் நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது தி.மு.க.-ம.தி.மு.க. இடையே கூட்டணி கூட கிடையாது.

ஒரே கொள்கை கொண்டவர்கள்
தாய்க்கழகமான தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ம.தி.மு.க.வும் நாங்களும் ஒரே கொள்கைக்காகத்தான் போராடி வருகிறோம். வைகோவின் அரசியல் செயல்பாடுகளையும், உழைப்பையும் நான் போற்றுபவன். பொடா வழக்கில் இருந்து வைகோ விடுதலை பெற்றுள்ளார். அதற்காக நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

தேர்தல் கூட்டணி
சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பழி வாங்கப்பட்ட போது தி.மு.க. அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அது போல தி.மு.க. உறுப்பினர்கள் பழி வாங்கப்பட்ட போது தே.மு.தி.க.வினர் குரல் கொடுத்தனர்.இந்த நிலைப்பாடு என்பது வேறு. தேர்தல் நேர அரசியல் கூட்டணி நிலைப்பாடு என்பது வேறு. இரண்டையும் ஒப்பிட முடியாது.

எதுவும் நடக்கலாம்
கூட்டணி பற்றி நாம் நினைப்பது சில சமயம் நடக்கலாம். சில சமயம் நடக்காமல் போகலாம். தேர்தல் சமயத்தை விட மற்ற நேரங்களில் அரசியல் சூழ்நிலை எப்போதும் மாறியே இருக்கும். ஆனால் அந்த மாற்றம் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அமைய வேண்டும். அது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது. எதிர்காலத்தில் மெகா கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications