நான் கைது செய்யப்படவில்லை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்
சென்னை: நான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத் வீட்டில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைணயில், கடந்த சட்டசபை தேர்தலின் போது கரூரில் அன்புநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.5 கோடி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குரிய என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலின்போது சிக்கிய பணம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் அனுப்பியது உறுதியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
தற்போது நடைபெற்ற சோதனையில் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கீர்த்திலால் குழுமத்தில் நடந்த சோதனையில் ரூ.2.5 கோடி கைப்பற்றப்பட்டு என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத்திடம் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்றும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தான் கைது செய்யப்படவில்லை என நத்தம் விஸ்வநாதன் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications