எத்தனையோ அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை பார்த்திருக்கிறேன்.. இதையும் பார்ப்பேன்.. குருமூர்த்தி சவால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனையோ அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை தான் பார்த்திருப்பதாகவும் தற்போது தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையையும் சந்திப்பேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் சவால் விட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கடுமையான விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் குருமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

I have seen many govt actions, i will see this govt action also: Gurumoorthy

இதைத்தொடர்ந்து ஜெயக்குமாரின் கண்டனங்களுக்கு டிவிட்டரில் பதிலளித்த குருமூர்த்தி முக்கிய சட்ட ஆலோசனையில் இருப்பதால் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பின்னர் பதில் அளிப்பதாக கூறியிருந்தார்.

அதன்படியே குருமூர்த்தி மீண்டும் டிவிட்டரில் பதிலளித்தார். அமைச்சர் மற்றும் அதிமுக அரசு என் மேல் நடவடிக்கை எடுப்பதை நான் வரவேற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவோ அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை நான் பார்திருக்கிறேன் என்ற அவர் இந்த நடவடிக்கையையும் சந்திப்பேன் சவால் விட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aditor Gurumoorthy has responded to Minister Jayakumar. Auditor Gurumoorthy says, I have seen many govt actions, i will see this govt action also.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X