சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்.. ரஜினியை பாஜகவிற்கு வாங்கன்னு நான் கூப்பிடல.. அமித்ஷா அந்தர் பல்டி
பாஜகவிற்கு வாருங்கள் என்று நான் ரஜினியை அழைக்கவில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அந்தர் பல்டி அடித்துள்ளார்.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதில் இருந்து அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவர், தனது கடைசி நாள் உரையால் அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து அழைப்பு மேல் அழைப்பு ரஜினிக்கு..

ரஜினிக்காக கதவு திறந்தே கிடக்கிறது
ரஜினி எப்படியாவது பாஜகவிற்கு வந்துவிட வேண்டும் என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா துடியாய் துடித்தார். ரஜினிகாந்த்திற்காக "கதவு திறந்தே கிடக்கிறது" என்று கூறினார்.

சத்ருகன் சின்ஹா அழைப்பு
இதற்கு மூச்சு விடாத ரஜினிகாந்த் தனது அடுத்தப் படத்தில் நடிக்க மும்முரமாகிவிட்டார். யார் என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் இருப்பதால் கடுப்பான பாஜக, அவரது நீண்ட நாள் சினிமா நண்பரான சத்ருகன் சின்ஹாவை விட்டு அழைப்பு விடுத்தது.

அன்புள்ள ரஜினி..
அவரும் தனக்கிட்ட பணியை டுவிட்டரில் செவ்வனே முடித்தார். டுவிட்டரில் தமிழ்நாட்டின் டைட்டானிக் கதாநாயகனே, இந்தியாவின் மகனே, அன்புள்ள ரஜினிகாந்த், நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு இதுவே சரியான மற்றும் உச்சக்கட்ட தருணம் என்றெல்லாம் வசனம் பேசி அழைப்பு விடுத்தார்.

ரஜினியிடம் இருந்து பதில் இல்லை
இந்த அழைப்பிற்கெல்லாம் ரஜினிகாந்த்திடம் இருந்து வெளிப்படையான பதில் இதுவரை வரவில்லை. இதனால் சலித்துப் போய்விட்டார்கள் பாஜக உயர்மட்ட தலைவர்கள்.

சீ.. சீ.. புளிக்கும்
இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தான் ரஜினியை பாஜகவிற்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை என்று அந்தர் பல்டி அடித்துவிட்டார். அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொன்னேனே தவிர பாஜகவிற்கு அழைக்கவில்லை என்றார். மேலும், அரசியலுக்கு வருவது ரஜினியின் சொந்த முடிவு என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார் அமித்ஷா.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications