சினிமா அரசியல் எனக்கும் தெரியும்! - கமல்ஹாஸன்
சென்னை: சினிமாவில் நான் அரசியல் பண்ணியதில்லை.. ஆனால் சினிமா அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும் என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
முறைமாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, பஞ்ச தந்திரம் உள்பட பல தமிழ்ப் படங்களிலும், 300-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்துள்ள ஜெயராமின் மகன் காளிதாசன் கதாயநாயகனாக அறிமுகமாகும் ‘ஒரு பக்க கதை' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கும் இரண்டாவது படம் இது.
இவ்விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், ஜெயராம் மகன் காளிதாசனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசியதாவது:

வித்தியாசமான பெயர்
காளிதாஸ் என்ற பெயர் சினிமாவில் யாருக்கும் கிடையாது. இந்தப் பெயர் மிக வித்தியாசமான பெயர். ஜெயராம் ஏற்கனவே பிளான் செய்துதான் இப்படி பெயர் வைத்திருக்கிறார். குடும்ப விஷயத்திலும் பக்காவாக பிளான் செய்பவர் அவர். அதனால்தான் அவருக்கு ஒரு பையன். ஒரு பெண்.
கணேசன் என்ற பெயர் தமிழ் சினிமாவில் பிரபலமான பெயர். அதனால்தான் கணேசன் என்ற பெயரில் வந்து பின்னர் ஜெமினி கணேசன் என்று மாற்ற வேண்டி வந்தது. இவருக்கு அந்த பெயர் மாற்றம் தேவை இல்லை.

நான் அறிமுகப்படுத்தவில்லை
இவரை அறிமுகப்படுத்துவது நான் இல்லை. இயக்குநர்தான். நான் சும்மா இவர்தான் ஜெயராம் மகன் காளிதாஸ் என்று சொல்வது மட்டும்தான். இனிமேல் இயக்குனர் மற்றும் காளிதாஸ் கையில்தான் உள்ளது.

உழைப்பில்தான் நம்பிக்கை
டி.என்.ஏ.யில் எனக்கு நம்பிக்கை இல்லை. உழைப்பில்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. டி.என்.ஏ. எவ்வளவு பலமாக இருந்தாலும், அதை விரயம் செய்யும் ஊதாரித்தனமான பிள்ளையாக இருந்தால் டி.என்.ஏ. ஒன்றும் செய்யாது. நல்லவேளை காளிதாசுக்கு முன்னாடியே சினிமாவை பற்றி அனுபவம் உள்ளது. எதையும் கண்டு வியக்கமாட்டார்.

புரிந்து கொள்வது முக்கியம்
சினிமாவில் பணிவை மட்டும் கற்றுக் கொள்ளாதீர்கள். சினிமாத் துறைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும் கற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ புரிந்தாவது கொள்ளுங்கள். லைட் பாய், தயாரிப்பாளர், புரொடக்ஷன் ஆள் என்ன செய்கிறார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.

சினிமா அரசியல்
ஏதாவது புரியாத குழப்பமான இண்டஸ்ட்ரி பாலிட்டிக்ஸ் அப்படின்னா என்னிடம் வந்து கேளுங்கள். அது ஜெயராமுக்கு தெரியாது. நான் ரொம்ப பட்டிருக்கிறேன். அதனால் எனக்குத் தெரியும். நல்லவர்கள் சூழ்ந்திருக்கும் உங்கள் வாழ்க்கையில் நல்லதே அமைய வாழ்த்துக்கள்.

வாய்ப்புகள்
வித்தியாசமான படங்களை எடுப்பவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். வித்தியாசமாகத்தான் மக்களே பார்க்கிறார்கள். அதற்காகத்தான் நான் நடிக்க வந்தேன். சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் புதியவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications