ஐ லவ் யூ அப்பா... சரத்குமாரை டுவிட்டரில் வாழ்த்திய ரேயான் - அழுத ராதிகா
சென்னை: சமக தலைவர் சரத்குமார் இன்று தனது 62வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு மகள் ரேயான் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வாழ்த்தை ரேயானின் தாயார் ராதிகா ரீ டுவிட் செய்துள்ளார். இந்த வாழ்த்தை படிக்கும் போது கண்களில் கண்ணீர் வந்ததாகவும் ராதிகா கூறியுள்ளார்.
ரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது என்பார்கள். ஆனால்நம் விஷயத்தில் அது தவறு. நம் இருவருக்கும் ஒரே டிஎன்ஏ இல்லைதான். ஆனால் எந்த வகையிலும் என் மீதான உங்களது பாசம் குறைந்ததில்லை.
Happy Birthday, Appa! ❤️ I love you to the moon and back 😘❤️ @realsarathkumar pic.twitter.com/1MVnnx4kBq
— Rayane Radikaa (@ray2092) July 14, 2016
நானும் அம்மாவும் திக்கு தெரியாமல் தவித்தபோது எங்களது புதிரை நீக்க வந்தவர் நீங்கள். எனது பெற்றோராக நீங்கள் மாறினீர்கள். எனது தந்தையாக மாறினீர்கள். அதன் பிறகு உங்களது பாசம் ஒருபோதும் பி்ன்வாங்கியதே இல்லை.
எனது வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் இருந்துள்ளீர்கள். எனக்குப் பாதுகாப்பாக, அக்கறையாக, ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து நடந்தீர்கள். எனது முக்கியமான தருணத்தில் எல்லாம் நீங்கள் என்னுடன் இருக்கத் தவறியதில்லை.
எனக்கு சரியான பல்கலைக்கழகத்தை தேர்வு செய்தது முதல் என்னுடைய கல்யாண சேலையை முடிவு செய்தது வரை. எப்போதும் எனக்கு சிறந்த அப்பாவாக இருப்பதற்கு நன்றிகள்.
Tears in my eyes reading this. pic.twitter.com/wIDS5WLyLk
— Radikaa Sarathkumar (@realradikaa) July 14, 2016
எனது வாழ்க்கையில் உங்களுக்கு நன்றி உடையவளாக இருப்பதை விட பெரியது எனக்கு எதுவுமே இல்லை. உங்களது மகள் என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன். அதை விட நீங்கள் எனது தந்தை சொல்வதில் மிகுந்த பூரிப்பும், பெருமையும் அடைகிறேன்.
அந்த நிலவுக்கும் பூமிக்குமாக சொல்கிறேன்.. ஐ லவ்யூ அப்பா.. ஹேப்பி பர்த் டே அப்பா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications