ஆட்டோ டிரைவரை தனியாக கூப்பிட்டு செல்ஃபி எடுத்த ஸ்டாலின்
கோவை: நான் யாரையும் அடிக்கவில்லை, மக்களை சந்திக்க இடையூறாக இருக்க வேண்டாம் என நான் கட்சியினரை அதட்டுவது உண்மை தான். ஆனால் நான் அடித்ததாக திட்டமிட்டு கிராபிக்ஸ் செய்து வீடியோவை பரப்பி வருகிறார்கள் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நமக்கு நாமே பயணத்தின் இரண்டாம் கட்ட பயணத்தை கடந்த 7 ஆம் தேதி நீலகிரியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அப்போது, தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியானது. நேற்று அது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக், டுவிட்டரில் பரவி வைரலானது.

ஸ்டாலின் விளக்கம்
நமக்கு நாமே பயணத்தை இன்று காலை கோவையில் நடைபயிற்சியோடு துவக்கிய ஸ்டாலின், வீடியோவிற்கு விளக்கம் அளித்தார். அப்போது, ''ஆட்டோ டிரைவரை தாக்கியதாக வெளியான வீடியோ திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மக்களை சந்திக்க இடையூறாக இருக்க வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதையும் மீறி மக்களை சந்திக்க இடையூறாக இருப்பவர்களை நான் கடுமையாக அதட்டுவது உண்மை தான்.
கிராபிக்ஸ் வீடியோ
ஆனால் அதை அரசியலாக்க, கிராஃபிக்ஸ் செய்து இந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள். எப்படி ஜெயலலிதா, சிறுதாவூர் பங்களாவில் இருந்து கொண்டு, அரசு பணிகளை செய்வதாக கிராஃபிக்ஸ் செய்து படத்தை வெளியிடுகிறார்கள், அதேபோல் இதையும் செய்து வருகிறார்கள்.
வைகோ பற்றி கவலையில்லை
நமக்கு நாமே பயணம் எழுச்சியோடு நடந்து வருகிறது. மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் மக்களை சந்திப்பது என்பது அவரவர்களின் விருப்பம். அவர்களின் கட்சியை வலுப்படுத்தும் முயற்சி. அதைப்பற்றி நான் கருத்து தெரிவிக்க எதுவுமில்லை. என்னை பற்றி வைகோ முன்வைக்கும் விமர்சனம் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை" என்றார்.
தவறான வீடியோ
இதற்கிடையே, ''வாட்ஸ் அப், ஃபேஸ் புக் போன்ற வலைதளங்களில் ஸ்டாலினை அவமானப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த வீடியோ தவறானது. அந்த வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை" என்று ஸ்டாலினிடம் அடிவாங்கியதாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் திலீப் கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?
இதனிடையே கூடலூரில் நடந்தது என்ன என்பது பற்றி ஸ்டாலினுடன் பயணிக்கும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடைபயணமாக மக்களை சந்தித்து வரும் போது கூட்டத்தில் தன்மீது மோதிய ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் லேசாக பிடித்து தள்ளினார் என்றும் ஆட்டோ டிரைவரை அடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆட்டோ டிரைவர் நீண்ட காலமாக திமுகவில் உறுப்பினராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தனியே செல்ஃபி
இதனிடையே தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஆட்டோ டிரைவரை வரவழைத்த ஸ்டாலின் தனியாக டிரைவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications