கையில ரூ.10,000 இருக்கு: இது நடிகர் பிரபுவுக்கு மட்டும் தெரியவே கூடாது!
சென்னை: பிரபல நகைக்கடை விளம்பரத்தில் வரும் நடிகர் பிரபுவை நினைத்து மக்கள் அஞ்சுவது போன்று ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் உலா வருகிறது.
நடிகர் பிரபு பிரபல நகைக்கடையின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். அவரை வைத்து வித விதமான விளம்பரங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். தற்போது பிரபு மக்களை வைரம் வாங்குமாறு கூறி வருகிறார். தற்போது டிவியில் வரும் விளம்பரத்தில் ஒருவருக்கு ரூ.10,000 போனஸ் கிடைக்கிறது. அதை அவர் பிரபுவிடம் தெரிவிக்க மனைவிக்கு வைரம் வாங்கிக் கொடுத்து அசத்துங்க என்கிறார்.
ரூ.10,000ல் வைரமா என்று அந்த நபர் கேட்க நம்ம கடையில் கிடைக்கும் என்று பிரபுவும் கூறுகிறார். உடனே அந்த நபர் தனது மனைவிக்கு வைர நகை வாங்கிக் கொடுக்கிறார். இந்நிலையில் இந்த விளம்பரத்தை கிண்டல் செய்து ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் உலா வருகிறது.

அந்த போஸ்ட்டில் கூறியிருப்பதாவது,
கையில பத்தாயிரம் இருக்கு
இந்த விஷயம் பிரபுக்கு மட்டும்
தெரியவே கூடாது
இல்லாட்டி வாங்க வைரம் வாங்கி
தாரேன்னு வாங்கிட்டு போயிடுவாரு...












Click it and Unblock the Notifications