ரஜினி அரசியலில் நியாயமாக செயல்படாவிட்டால் அவரையும் விமர்சிப்பேன்: கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் அரசியலில் நியாயமாக செயல்படாவிட்டால் அவரையும் விமர்சிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் கொச்சையாக பேசுவது, உடன் இருப்பவர்களை அவமானப்படுத்துவது என தொடர்ந்து செய்து வருகிறார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

I was the first to say that the system is not right - kamalhasan

இந்நிலையில் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிக்பாஸ் குறித்து எழுந்துள்ள புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே இந்தியில் ஒளிபரப்பானது தான். என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது கூட்டு குடும்பம் போன்றது.

சினிமாவிலேயே சென்சார் இருக்கக் கூடாது என நினைப்பவன் நான். பணத்தேவைக்காகத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறேன். பொதுச்சேவை செய்ய பிக்பாஸ் நடத்தவில்லை. சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை. அந்த கருத்தை நான் எதிர்க்கவும் இல்லை. ரஜினிகாந்த் அரசியலில் நியாயமாக செயல்படாவிட்டால் அவரையும் விமர்சிப்பேன். இவ்வாறு கமல் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
I was the first to say that the system is not right, said actor kamalhasan
Please Wait while comments are loading...