அரசியலில் குதித்து அமைச்சராக ஆசை... அறிவித்த நமீதா...

Subscribe to Oneindia Tamil

நம்ம நமீதாவா இது என்று கேட்கும் அளவிற்கு ஸ்லிம் ஆகிவிட்டார் நமீதா... மீண்டும் தமிழ் சினிமா உலகில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்தால் அதுதான் இல்லை... அரசியலில் ஈடுபட தயார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் நமீதா.

அமைச்சராகி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று கூறியுள்ள நமீதா, அரசியலுக்கு வருவதால் குஷ்புக்கு போட்டியில்லை என்றும் குஷ்பு எனக்கு அக்கா மாதிரி என்றும் கூறியுள்ளார் நடிகை நமீதா.

விஜயகாந்த் அறிமுகம்

விஜயகாந்த் அறிமுகம்

மச்சான் என்று ரசிகர்களை அன்போடு அழைக்கும் நமீதா விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா' படம் மூலம் தமிழில் அறிமுகமானர்.‘ஏய்', ‘இங்லீஸ்காரன்', ‘சாணக்யா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.

மச்சான் நடிகை

மச்சான் நடிகை

இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால் இளைஞன் படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. காரணம் உடல் குண்டானதே. கடைதிறப்பு... கிஸ்கால் விளம்பரம் என அவ்வப்போது தலைகாட்டினாலும் உடல் எடையைக் குறைக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டார்.

ஸ்லிம் ஆன நமீதா

ஸ்லிம் ஆன நமீதா

உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு குறைந்து போனது. அதனால் 96 கிலோ எடையை 76 கிலோவாக குறைத்துள்ளேன் என்கிறார் நமீதா. இதனால் இப்போது சந்தோசமாக இருக்கு என்று கூறும் நமீதாவிற்கு ஆக்சன் படங்களில் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம் கூடவே அரசியலில் ஈடுபடும் ஆசை வந்துவிட்டது என்கிறார்.

அமைச்சராகி சேவை செய்வேன்

அமைச்சராகி சேவை செய்வேன்

எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கடந்த தேர்தலின் போதே எனக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தனர். அப்போது விருப்பம் இல்லை. விரைவில் அரசியலில் ஈடுபடுவேன் அமைச்சராகி மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

குஷ்புவுக்கு போட்டியா?

குஷ்புவுக்கு போட்டியா?

அரசியலில் ஈடுபாடு இருப்பதால் குஷ்புக்கு போட்டி என்று நினைக்காதீர்கள். குஷ்பு எனக்கு அக்கா மாதிரி. விரைவில் நல்ல அரசியல் கட்சி ஒன்றில் சேருவது உறுதி.

திருமண ஆசை

திருமண ஆசை

எனக்கு யார் மீதும் காதல் இல்லை. என்னுடைய திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார். என்னுடைய வருங்கால கணவர் கோடீஸ்வரனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ இருக்கவேண்டும் என்று ஆசைப்படவில்லை.

மூன்று குழந்தைகள்

மூன்று குழந்தைகள்

எனக்கு கணவராக வரப்போகிறவர் தாடி வைத்துக் கொண்டு கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தால் கூட திருமணம் செய்துக் கொள்வேன். மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஆசை என்கிறார் நமீதா.

எந்தக்கட்சி?

எந்தக்கட்சி?

கடந்த ஆண்டே நடிகை நமீதா அரசியலில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது அதனை மறுத்த நமீதா, இப்போது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியா? பாஜகவா? காங்கிரஸ் கட்சியிலா எந்தக்கட்சியில் நமீதா இணைவார் என்பதை விரைவில் அறிவிப்பார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+