அப்படித்தான் அடிப்பேன், தப்பு செஞ்சா அடிப்பேன்... விஜயகாந்த்
உளுந்தூர்ப்பேட்டை: நான் அடிக்கிறேன், அடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். நான் அடிப்பேன், தப்பு செஞ்சா அடிப்பேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சியில் நேற்று நடந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பேசியபோது இப்படித் தெரிவி்த்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் பேச்சின்போது நடந்த சில சுவாரஸ்ய விஷயங்கள்...

அடிக்கிற கைதான் அணைக்கும்
விஜயகாந்த் தனது பேச்சின்போது திடீரென அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பாட்டின் முதல் வரியைப் பாடினார். பின்னர் அவர், தொண்டர்கள் தவறு செய்தால்தான் அடிக்கிறேன். அதை குறை சொல்கிறார்கள்.

டிரைவரைப் போட்டு வெளுத்தேனே...
அப்படித்தான் அடிப்பேன். என் கார் டிரைவரை அடித்தேன். தப்பு செய்ததால்தான் அடித்தேன். ஆனாலும் மனசு கேட்காமல் அவனுக்கு அன்று வழக்கத்தை விடவும் அதிகமாக சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுத்து கவனித்தேன். இதனால், அவன் என் மனைவியிடம், கேப்டன் என்னை அடிக்கடி அடிக்கட்டும். அப்பதான் இந்த மாதிரி கவனிப்பு கிடைக்கும்.

அப்படித்தான் அடிப்பேன்
யார் எது சொன்னாலும் எனக்கு கவலையில்லை. தப்பு செஞ்சா அடிப்பேன் என்றார் விஜயகாந்த்.

ஊஊஊஊஊஊ.. தொண்டர்கள் மீது பாய்ந்த விஜயகாந்த்
மாநாடு நடந்து கொண்டிருந்தபோது மேடையின் முன்பக்கம் கூடியிருந்த தொண்டர்கள் ஊ என்றும், விதம் விதமாகவும் கத்தியபடியும், சத்தம் போட்டுப் பேசியபடியும் இருந்தனர்.

முறைத்தார்.. அதட்டினார்...
விஜயகாந்த் பேசும்போதும் அவர்கள் அடங்கவில்லை. இதனால் கடுப்பாகிப் போன விஜயகாந்த், அவர்களைப் பார்த்து முறைத்தார். பின்னர் உனக்கு என்ன வேணும் என்று அதட்டிக் கேட்டார். ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும் கோபமாகச் சொன்னார். ஆனாலும் அந்த சத்தம் மட்டும் நிற்கவே இல்லை...

விஜயகாந்த்துக்கு பூ விடு துது
இன்னொரு குறும்புக்கார தொண்டர் விஜயகாந்த் மீது பூவைத் தூக்கிப் போட்டு விளையாடி மகிழ்ந்தார். அடிக்கடி விஜயகாந்த் மீது பூவைத் தூக்கி எறிந்தார்.

தம்பி ... குணியாத ... நிறுத்திக்க
இதனால் மறுபடியும் டென்ஷனான விஜயகாந்த், தம்பி, எனக்கு யாருன்னு தெரியும். பூவை தூக்கி தூக்கி விசிவிட்டு குனிந்து உட்கார்ந்திருக்க. வேணாம்; இத்தோடு நிறுத்திக்க என்று கடுமையாக எச்சரித்தார்.
இப்படி நிறைய சுவாரஸ்யங்களை எறஞ்சி மாநாட்டின்போது பார்த்து மகிழ முடிந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications