சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக மீண்டும் தொல். திருமாவளவன் போட்டி
சென்னை: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று சென்னையில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை அடுத்தடுத்து அறிவித்தன.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சிதம்பரத்தில் தாம் மீண்டும் போட்டியிடுவதாகவும் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்றும் கூறினார்.
கடந்த லோக்சபா தேர்தலிலும் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றிருந்தது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டார். அங்கு பாமக சார்பில் பொன்னுச்சாமி வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அத்தேர்தலில் திருமாவளவன் 99 ஆயிரத்து 414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருமாவளவன் 4,28,516 வாக்குகளையும் பொன்னுச்சாமி 3,29,102. வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications