டோணியின் ஹெலிகாப்டர் ஷாட்டை ரசிச்சு பார்ப்பேன்..ஸ்டாலினின் கிரிக்கெட் ஆர்வம்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோணியின் ஹெலிகாப்டர் ஷாட்டை தான் ரசிச்சு பார்ப்பேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரபல அரசியல் தலைவராக... திமுகவின் பொருளாளராக இருந்தாலும் மு.க.ஸ்டாலினுக்கு விளையாட்டின் மீது அதீத ஆர்வம் உண்டு. நமக்கு நாமே பயணம் செல்லும் போதே இளைஞர்களுடன் கால்பந்து, கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்.
சன்டிவியில் 'ஸ்டாலினிடம் கேளுங்கள்' நிகழ்ச்சியில் பரபரப்பான அரசியல் கேள்விகளுக்கு நடுவே, சினிமா, நடிப்பு, விளையாட்டு ஆர்வம் பற்றி வாக்காளர்கள் சிலர் கேள்வி கேட்டனர்.

நடிப்பில் ஆர்வம்
திரைப்படங்களில் நடித்திருக்கிறீர்களா என்றும், எந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்தமானது என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அரசியல் கட்சி பிரச்சாரத்திற்காக நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதாக கூறினார்.
தூர்தர்சனில் சீரியலில் நடித்ததோடு சில திரைப்படங்களில் கவுரவ வேடத்தில் நடித்ததாகவும் கூறினார்.

கிரிக்கெட் பிடிக்கும்
தனக்கு கிரிக்கெட் போட்டி பிடிக்கும் என்று கூறிய ஸ்டாலின், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை விரும்பி பார்ப்பேன் என்று கூறினார்.

சிஎஸ்கே இல்லையே
ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே விளையாடுவதை ரசித்து பார்ப்பேன் என்று கூறினார். இம்முறை சிஎஸ்கே அணி இல்லை என்பது வருத்தம்தான். ஒருவேளை இருந்திருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதால் பார்த்திருக்க முடியாது என்றும் கூறினார்.

ஹெலிகாப்டர் ஷாட்
பிடித்த விளையாட்டு வீரர் யார் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், டோணியின் விளையாட்டு ரொம்ப பிடிக்கும், அதுவும் அவருடைய ஹெலிகாப்டர் ஷாட் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பேன் என்றும் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications