For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுக்கு எதிரான பாஜகவின் 'ஆபரேஷன் ரஜினிகாந்த்'... கமல்ஹாசன் "ஒப்புதல் வாக்குமூலம்"

எதிர்காலத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவை ஒழிக்க பாஜகவின் ஆபரேஷன் ரஜினிகாந்த்... கமல்ஹாசன்... 'ஒப்புதல்'- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை களமிறக்கி ஆதாயம் அடைய பாஜக திட்டமிடுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். ரஜினியுடன் இணைந்து தமிழக மக்களை மேம்படுத்தப் போவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரையில் சலசலப்புகள் தென்பட தொடங்கிவிட்டன.

    பாஜக எதிர்ப்பு அரசியலில் திமுக தீவிரமாக இல்லையோ என மக்கள் நினைப்பதாலேயே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டெபாசிட்டை அக்கட்சி இழந்தது. வலிமையான திராவிட அரசியல் தலைவர்கள் இல்லாத சூழலிலும் கூட பாஜகவால் இங்கே காலூன்ற முடியாத கலவர நிலைதான் இருக்கிறது.

    திராவிடம் பேசும் கமல்

    திராவிடம் பேசும் கமல்

    இதனால்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசனை அரசியலில் களமிறக்கி அவர்களை முகமாக வைத்து ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. ரஜினிகாந்த் தமது பாதை ஆன்மீக அரசியல் என்கிறார். கமல்ஹாசனோ திராவிடம் என பேசிக் கொண்டிருக்கிறார்.

    கருத்து கணிப்பு முடிவுகள்

    கருத்து கணிப்பு முடிவுகள்

    அதிமுகவின் வாக்குகளை ரஜினிகாந்தும் திமுகவின் வாக்குகளை கமல்ஹாசனும் அறுவடை செய்யலாம் என நினைத்துக் கொண்டு இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசியல் களத்தில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்தால் வெல்லவே முடியாது என கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.

    கமல் அறிவிப்பு

    கமல் அறிவிப்பு

    இருப்பினும் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் கூட்டணி சேர வைத்து திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் டெல்லியின் ஒரே அஜெண்டா. இதுவரை ரஜினிகாந்த் குறித்து பட்டும் படாமலும் கூறிவந்த கமல்ஹாசன் இன்று வெளிப்படையாகவே ரஜினியுடன் இணைவது பற்றி தெரிவித்திருக்கிறார்.

    கூட்டணி சமிக்ஞை

    கூட்டணி சமிக்ஞை

    தமிழக மக்களை மேம்படுத்த எத்தகைய எதிர்ப்புகளையும் நானும் ரஜினிகாந்தும் இணைந்து எதிர்கொள்வோம் என கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதாவது எதிர்காலத்தில் ரஜினிகாந்துடன் கூட்டணி சேருவேன் என்பதற்கான சமிக்ஞையாகவே கமலின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது. பாஜகவின் ஆபரேஷன் ரஜினிகாந்தின் அடுத்த அத்தியாயத்துக்கு சுழி போட்டிருக்கிறார் கமல்ஹாசன். இது சூறாவளியாகுமா? சூனியமாகுமா? என்பது தமிழக மக்களின் கையில்தான் இருக்கிறது.

    English summary
    Actor Kamal Haasan said that he will join hands with Actor Rajinikanth who will float a new party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X