விரைவில் ஜெயலலிதாவை சந்திப்பேன்.. மாஜி "தளபதி" திருநாவுக்கரசர் தகவல் #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பழைய நண்பரும், அவருக்கு ஒரு காலத்தில் தளபதி போல இருந்தவரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவருமான திருநாவுக்கரசர், முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முதல் முறையாக உடைந்தபோது ஜெ அணியில் இடம் பெற்றவர் திருநாவுக்கரசர். அப்போது இவரும், சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் ஜெயலலிதாவின் தளபதிகளாக செயல்பட்டனர்.
ஜெயலலிதா அணியின் எம்.எல்.ஏக்களை ஆம்னி பஸ் வைத்து பாதுகாப்பாக கூட்டிச் சென்றனர். பின்னர் ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திருநாவுக்கரசர் தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.
ஜெயலலிதா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் திருநாவுக்கரசர்.இதுகுறித்து அவர் கூறியதாவது...

ஜெ. நலம் பெற வேண்டும்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றினேன்
நான் அதிமுக இளைஞரணிச் செயலாளராக இருக்கும்போது அவர் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தேன். அவருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.

ஜெ.வை சந்திப்பதில் பிரச்சினை இல்லை
எனவே, தனிப்பட்ட முறையிலும், தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நிச்சயம் சந்திப்பேன்.

நேரி்ல் பார்க்கவில்லை
முதல்வரிடம் உடல்நலம் குறித்து நலம் விசாரிக்க அப்பலோ மருத்துவமனைக்குச் சென்றவர்கள் யாரும் அவரை நேரில் பார்த்ததாகவோ, நேரில் நலம் விசாரித்ததாகவோ சொல்லவில்லை.

அனுமதி கிடைத்தால் சந்திப்பேன்
இந்நிலையில், நானும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. முதல்வர் குணமடைந்ததும் அனுமதி கிடைத்தால் அவரை நேரில் சந்தித்துப் பேசுவேன் என்றார் திருநாவுக்கரசர்.
-
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications