சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 21-ந் தேதி வெளியிடப்படும். தஞ்சையில் 20-ந் தேதி முதல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.
இந்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.
இவ்வாறு வாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications