மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை!- குஷ்பு
சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அவருடைய பெயரில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காரணம், குஷ்பு வீடு இருப்பது மயிலாப்பூரில்தான்.

தி.மு.க. கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிதான் பெற்றுள்ளது. எனவே குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதனைக் குஷ்பு மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் போட்டியிடப் போவதாக யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த தேர்தலிலும் மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட போவதாக செய்திகள் பரவி இருக்கிறது. அது உண்மை இல்லை. நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை," என்றார்.
மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications