Ravi Mohan: யார் கையை அறுத்து திருமணம் செய்தது என்பதை நிரூபிப்பேன்! ரவி மோகனுக்கு மாமியார் சுஜாதா பதிலடி
சென்னை: யார் கையை அறுத்து திருமணம் செய்தது என்பதை நிரூபிப்பேன் என ரவிமோகனின் மாமியாரும் ஆர்த்தியின் தாயுமான சுஜாதா தெரிவித்துள்ளார். ஆர்த்தி, அவரது குடும்பம் குறித்து காலை ரவிமோகன் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்த நிலையில் சுஜாதா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: ரவிமோகனின் அவதூறுகளுக்கு பதில் அளிக்கப்படும். யார் கையை அறுத்து திருமணம் செய்தது என்பதை நிரூபிப்பேன்.
வேஷம் போட்டு ரவி மோகன் பேட்டி கொடுத்துள்ளார். இந்த 2 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ரவிமோகன் பிள்ளைகளை சந்தித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு வங்கிக் கணக்கு என்னோடது, உன்னோடது என்றெல்லாம் இல்லை. எல்லாம் ஒரே அக்கவுண்ட்தான்.
எனக்கு மருத்துவ செலவுக்கு ரூ 25 ஆயிரம் மாதாமாதம் கொடுத்ததாக சொல்கிறார், அப்படி அவர் கொடுத்ததே இல்லை. அவர் கொடுத்ததாக சொல்வதால் என் மகன் கொடுத்தது போல் நான் மகிழ்கிறேன். ரவி மோகன் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. நாங்கள் ஒரு போதும் அவரை மரியாதை குறைவாக பேச மாட்டோம்.
ஆர்த்திக்கு ஆதரவாக அவர்கள் குறிப்பிட்ட நடிகைகள் மட்டும் இல்லை, எண்ணற்ற மக்கள் ஆதரவாக கமென்ட் போட்டுள்ளார்கள். அதை அவர் பார்க்க வேண்டும். இதற்கு மேல் இந்த விவகாரத்தில் பேசினால் நீதிமன்ற அவதூறு ஆகிவிடும். எனது உறவினரை ரவி அழைத்து வைத்து பேட்டி கொடுத்திருந்தார். அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை. அவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ரவி அவரது குழந்தைகளுக்காக வாழ்கிறார் என்றால் எனது மகள்களுக்காக நான் வாழ்கிறேன். எல்லாரும் அப்படித்தான் என சுஜாதா தெரிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். இதற்கு ஆர்த்தி ஒப்புக் கொள்ளவில்லை. எனினும் ரவிமோகன் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ரவிக்கு கெனிஷா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பொதுவெளியில் வருவது, பிரபலங்களின் திருமணங்களுக்கு மேட்சிங் ஆடைகளை அணிந்து கொண்டு வருவது, ஸ்டூடியோவை தொடங்கியது என இருந்து வருகிறார்கள்.
இதனால் கெனிஷாவுடன் ரவிக்கு தொடர்பு என சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டன. இதையடுத்து தான் ரவியை விட்டும் சென்னையை விட்டு செல்வதாக கெனிஷா தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து ரவிமோகன் காலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: நான் பேசாமல் இருந்தது முட்டாள்தனம் என நினைக்கிறேன். நான் எப்போதும் விட்டுக் கொடுப்பவன். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது. என்னை சீண்ட நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், என் ஆபிஸுக்கு வந்து பஞ்சிங் பேக்காக யூஸ் செய்துக் கொள்ளுங்கள். மறைமுகமாக வேண்டாம்!
என் படம் இனி தியேட்டரில் ரிலீஸாகாது. என்னால் நடிக்க முடியவில்லை, எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களால் என்னால் தாங்க முடியவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை சரியாகும் வரை, சைபர் புல்லியிங் சரியாகும் வரை நான் நடிக்க மாட்டேன். என் அலுவலகத்தில் வந்து சீண்டி பாருங்கள்.
பேராண்மையில் பெண்களுக்கான உரிமை குறித்து எனது வசனம் எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மிகப் பெரிய சக்தி, அதை வீணடிக்கக் கூடாது.
என்னுடன் வாழ்ந்த போதெல்லாம் நான் கடவுளாக இருந்தேனா, எத்தனை இன்டர்வியூக்களில் என்னை பெருமையாக பேசியிருக்கிறார், அப்போதெல்லாம் feminism தெரியவில்லையா? ஆர்த்தி வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள். அது போல் என் தாய், தந்தையும் வேண்டாம் என்றார்கள். ஆனால் நான்தான் கேட்கவில்லை, அவரது கையை அறுத்து என்னை மிரட்டிதான் திருமணம் செய்தார் என ரவி மோகன் கடுமையாக விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications