எம்எல்ஏ ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன்... ஹாட்ஸ் ஆப் வசந்தகுமார்
எம்எல்ஏவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் தெரிவித்தார்.
சென்னை: எம்எல்ஏகளுக்கான ஊதியம் இரு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில் தனக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் அறிவித்து முன்மாதிரியாக திகழ்கிறார்.
தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த ஊதிய உயர்வு தேவையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தனக்கு வழங்கப்படவுள்ள ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிட உள்ளதாக நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், காமராஜரின் இலவச கல்வியில் பயின்று முன்னேறிய நான் கடந்த 2006-2011-ஆம் ஆண்டு எம்எல்ஏ-வாக இருந்தபோது
பெற்ற ஊதியத்தில் பல கிராமங்களில் இலவச டியூஷன் சென்டர்களை அமைத்ததோடு ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செலவழித்துள்ளேன்.
கடந்த முறை எம்எல்ஏ ஆகும் வாய்ப்பை இழந்தாலும் மாதந்தோறும் அந்த தொகையை செலவு செய்து இலவச டியூஷனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் செலவிட்டேன். தற்போது எம்எல்ஏ-க்களின் ஊதியம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் அதை ஏற்கெனவே செய்து வந்த கல்வி வளர்ச்சி திட்டத்துக்கு இரு மடங்காக செலவிடுவேன் என்று தனது அறிக்கையில் வசந்தகுமார் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications