பிக் பாசில் இருந்து வெளியேற்ற சதி.. ஜூலி கதறல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து என்னை வெளியேற்ற சதி நடக்கிறது என்று ஜல்லிக்கட்டு போராட்ட பெண்மணி ஜூலியானா கூறியுள்ளார்.
பல மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டுக்குள் தங்க வைக்கப்பட்டு இவர்களை சுற்றி 30 கேமராக்கள் கண்காணித்து வரும். இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மட்டும் அன்றாடம் இரவு 9 மணி முதல் 10 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் குழுவில் யார் ஜெயிப்பது என்பது பற்றி தன் விளக்கம் தரும்படி அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வரும் மேடையில் ஏறி, நான் வெற்றி பெறுவேன், அதற்கு என்ன காரணம் என்பது பற்றியும் பேசினர். இதில், ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி பேசுகையில், திடீரென கதறி அழுதார். இதனால், மற்றவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோர் ஜூலிக்கு ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து பேசிய ஜூலி, நான் சாதாரண குடும்பத்துப் பெண். எனது தந்தை மிகவும் சிரமப்பட்டு எங்களை காப்பாற்றினார். சிறு வயது முதலே கல்விபெற மிகவும் கஷ்டப்பட்டேன். தொண்டு நிறுவனங்களின் உதவியால்தான் படித்து, முன்னுக்கு வந்தேன். நர்ஸ் வேலையில் தற்போது உள்ளேன். நான் எப்போதும் உண்மையே பேசுவேன். எனக்கு பொய் எல்லாம் பேசத் தெரியாது. நடிக்கவும் தெரியாது. நான் வெற்றி பெறுவேன். பிக் பாஸ் பட்டம் வெல்வேன் ஆனால், இங்கே இருப்பவர்கள் என்னை சாதாரண ஆளாகப் பார்த்து புண்படுத்துகிறார்கள். இவ்வாறு ஜூலி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications