ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் பற்றி பேச அனுமதி மறுப்பு: திமுக வெளிநடப்பு
சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரியை சஸ்பெண்ட் செய்வது என்று சொன்னால், அதில் என்ன நடத்திருக்கிறது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு, இந்த அரசு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்,
தமிழக சட்டப்பேரவையில், இன்று வருவாய் , இயற்கைச் சீற்றங்கள் துயர் தணிப்புத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இதில், கேள்வி நேரம் முடிந்ததும், முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட குறித்த விளக்கத்தை பேரவையில் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திப் பேசினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த, சபாநாயகர் தனபால், அதிகாரிகளின் பெயரை சட்டசபையில் குறிப்பிடக்கூடாது என்று கூறி, அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்த விளக்கத்தை கேட்டதற்கு, அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்று கூறி அவைக்குறிப்பில் இருந்து அதை சபாநாயகர் நீக்குகிறார்
முதல்வர் ஜெயலலிதா, இதே கூட்டத்தொடரில், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பெயரை சொல்லி அவையிலே பதிவு செய்கிறார். ஆக, முதல்வருக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா என்றுதான் வெளிநடப்பு செய்துள்ளோம்.
ஒரு அதிகாரியை அதுவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை சஸ்பெண்ட் செய்வது என்று சொன்னால், அதில் என்ன நடத்திருக்கிறது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு, இந்த அரசு தெரிவிக்க வேண்டும். அந்த உரிமையில்தான் சட்டசபையில் இந்தக் கேள்வியைக் கேட்டோம். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட காரணத்தால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications