சிலையை கடத்தி விற்ற டிஎஸ்பி காதர் பாஷா.. விரைவில் கைது.. போலீசார் தீவிரம்
அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சிலையை கடத்திய வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை: சிலையை கடத்தி பணத்தை பங்கு போட்டுக் கொண்ட வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷா விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவருடைய விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, ஐம்பொன் சிலைகள் 6 கண்டெடுக்கப்பட்டன.
இந்தச் சிலைகள் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரே தாய்லாந்து நாட்டிற்கு கடத்தினர். ஐம்பென் சிலைகள் 6ம் 6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சிலை கடத்திய 4 போலீசார்
இந்த சிலைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள முகவர் மூலம் தாய்லாந்திற்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து டிஎஸ்பி காதர்பாஷா உள்ளிட்ட 4 போலீசார் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

சம்பவம் அம்பலம்
2008ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளியான உண்மை
இந்தக் கடத்தலில் தொடர்புடைய எஸ்பி சுப்புராஜிடம் போலீசார் நடத்தினர். அதில் சிலை விற்கப்பட்டதும், அதன் மூலம் கிடைத்த பணத்தை டிஎஸ்பி காதர்பாஷாவுடன் பகிர்ந்து கொண்டதையும் ஒப்புக் கொண்டார்.

போலீஸ் அதிகாரிகள் கைது
இதைத் தொடர்ந்து சுப்புராஜ் கைது செய்யப்பட்டார். டிஎஸ்பி காதர்பாஷா உள்ளிட்டவர்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications