முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் மல்லுக்கட்டத் தயார்.. தோள் தட்டும் அன்புமணி
சென்னை: திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டாலும் அவரை எதிர்கொள்ள தயாராக இரு்பபதாக பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், www.anbumani4cm.com என்ற இணையதளத்தை பா.ம.க. வினர் தொடங்கியுள்ளனர்.

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த விழாவில், அந்த புதிய இணையதளத்தை அன்புமணி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது...
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியில் சாராயமும், ஊழலும்தான் அதிகரித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும். எங்கள் மீது சில குறைகள் சொல்லப்படுகின்றன. அவற்றை திருத்திக் கொள்வோம்.
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி வேண்டும், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. எல்லோரும் காமராஜர் ஆட்சியைத்தான் கேட்கின்றனர். அப்படிப்பட்ட ஆட்சியை எங்களால் கொடுக்க முடியும்.
எங்கள் கட்சியில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதேபோல தி.மு.க.வில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளேன். புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்டினேன். அதனால் தமிழக முதல்வராக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
இலவசங்கள் கொடுக்க மாட்டோம். விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவோம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடுவோம்
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications