ஸ்கீமுக்கு அர்த்தம் தெரியாவிட்டால் டிக்சனரி பாருங்க... மத்திய அரசுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாவிட்டால் மத்திய அரசு டிக்ஸ்னரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி பிரச்னையில் விருப்பு, வெறுப்பு பார்க்காமல் அனைவரும் ஒரே உணர்வோடு குரல்கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

If central govt dont know the meaning of scheme they can refer dictionary: Jayakumar

மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை என்றும் அவர் கூறினார். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்புப் பயணம் என்பது முற்றிலும் தோல்வி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் டிக்ஸ்னரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் தான் என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

காவிரிக்காக என்றென்றும் உரிமையை காக்கும் இயக்கம் அதிமுகதான் என்ற அவர்,மெரினாவில் அறவழியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar says if central govt dont know the meaning of scheme they can refer diftionary on the cauvery issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற