திமுக கூட்டணியில் தேமுதிக-காங் சேர்ந்தால்.. ஜெ வைத்திருக்கும் 'பிளான் பி'

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணி அமைந்தால் அதிரடியாக பாஜக, மதிமுக, பாமகவை தமது தலைமையில் இணைத்து ஒரு கூட்டணியை அமைக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் களத்தின் தொடக்க நிலையில் பாஜக, அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே விரிசல் விழுந்தது. ஜெயலலிதா தன்னைத் தான் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தி வருகிறார்.

இந்த விரிசலில் அதிமுக அணியில் இடதுசாரிகள் தங்களது இருப்பை உறுதி செய்து கொண்டன. அதே நேரத்தில் பாஜகவும் புதிய துணிச்சலோடு தமிழகத்தில் ஒரு மெகா கூட்டணி அமைக்க முயற்சித்தது. இதில் 'ஒருங்கிணைப்பாளராக' தமிழருவி மணியன் செயல்பட்டார்.

பாஜக தலைமையில் மாற்று அணி

பாஜக தலைமையில் மாற்று அணி

பாரதிய ஜனதா, மதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளைக் கொண்ட ஒரு மாற்று அணியை உருவாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

காங். உறவு முறித்த திமுக

காங். உறவு முறித்த திமுக

இந்த நிலையில்தான் திமுக, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது. அத்துடன் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து திமுக தேர்தலை சந்திக்கும் என்று அறிவித்தது.

இப்படி ஒரு கள நிலைமை

இப்படி ஒரு கள நிலைமை

அதிமுக அணியில் இடதுசாரிகள், திமுக அணியில் 2 கட்சிகள் என்ற சமநிலை ஒரு பக்கம், பாஜக அணியில் மதிமுக, தேமுதிக, பாமக என மறுபக்கம், தனித்துவிடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி என்பதுதான் கள நிலைமையாக இருந்து வந்தது.

திமுக- தேமுதிக பேச்சுவார்த்தை

திமுக- தேமுதிக பேச்சுவார்த்தை

இந்நிலையில் திமுக அணியை வலுவாக்கும் வகையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இதனால் திமுக அணியில் தேமுதிக இணையக் கூடும் என்ற நிலை உருவானது. மேலும் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவையும் திமுகவை ஆதரித்தன.

கருணாநிதி- ஆசாத் சந்திப்பு

கருணாநிதி- ஆசாத் சந்திப்பு

அதே நேரத்தில் பாஜக அணியில் இருந்து பாமக வெளியேறும் நிலையும் உருவானது. இதனால் லோக்சபா தேர்தல் கள நிலைமை மாற்றங்களை சந்தித்தது. இந்த நிலைமையை மேலும் ஒட்டுமொத்தமாக தலைகீழாகிப் போட்டது மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தின் கருணாநிதியுடனான சந்திப்பு.

திமுக அணியில் காங், தேமுதிக?

திமுக அணியில் காங், தேமுதிக?

கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்த பின்பு, திமுக அணியில் காங்கிரஸ், தேமுதிக இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக அணியில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் என பிரம்மாண்ட கூட்டணி உருவாகும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த கூட்டணி அமையுமேயானால் 'வெற்றி கூட்டணி'யாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதிமுக பிளான் பி

அதிமுக பிளான் பி

திமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி அமையும் நிலை உருவாகியிருப்பதால் அதிமுக தலைமை 'பிளான் பி'யை செயல்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதென்ன அதிமுகவின் பிளான் பி?

அதிமுக அணியில் பாஜக, மதிமுக, பாமக?

அதிமுக அணியில் பாஜக, மதிமுக, பாமக?

திமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகுமேயானால் அதற்கு சமமாக அதிமுகவும் பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்குமாம். அதாவது அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா, மதிமுக, பாமக ஆகியவற்றை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவது என்பதுதான் அதிமுகவின் பிளான் பி. இதில் பாமக இடம்பெறுமா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.

கைவிடப்படும் இடதுசாரிகள்?

கைவிடப்படும் இடதுசாரிகள்?

அப்படியானால் நிலையில் இடதுசாரிகள் தனித்துவிடப்பட்டோ அல்லது இடதுசாரிகளில் மார்க்சிஸ்ட் கட்சி திமுக அணிக்கோ செல்லக் கூடிய நிலைமை உருவாகும். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனியே தன்னந்தனியே தவித்துக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை விறுவிறுப்பான திருப்பங்கள் உருவாகுமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+