நடிகனாகி இருந்தால் ஜெயலலிதாவுடன் படம் நடித்திருப்பேன்.. சட்டசபையில் துரைமுருகன் கலகல
சிறு வயதில் நடிப்பை தொடர்ந்து இருந்தால், சினிமாவில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று இன்று சட்டசபையில் திமுகவை சேர்ந்த துரைமுருகன் பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: சிறு வயதில் நடிப்பை தொடர்ந்து இருந்தால், சினிமாவில் ஜெயலலிதாவுடன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று சட்டசபையில் திமுகவை சேர்ந்த துரைமுருகன் பேசியுள்ளார்.
இன்று சட்டசபையில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. நேற்று கிமு கிபி வார்த்தைகளை பாடப்புத்தகத்தில் இருந்து அகற்றியது, இசை நிகழ்ச்சி குறித்து துரைமுருகன் காமெடி செய்தது என்று நிறைய கலகலப்பான விஷயங்கள் நடந்தது.

அதேபோல் இன்றும் துரைமுருகன் சபாநாயகரை இடையிடையே வம்பிற்கு இழுத்து காமெடி செய்தார். சபாநாயகரும் விடாமல் காமெடியாக அவரை கிண்டல் செய்தார்.
இன்று பேச தொடங்கிய துரைமுருகன், இந்த அவையில் எல்லோரும் நடிக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர் கட்சி, சபாநாயகர் என்று எல்லோரும் நடிக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் எல்லா அரசியல்வாதிகளும் நடிகர்கள் என்று கூறினார், அதேபோல்தான் இங்கும் எல்லோரும் நடிக்கிறார்கள், என்றார்.
இதற்கு சபாநாயகர், ஆமாம் எல்லோரும் நடிக்கிறார்கள், நீங்களும் நடிக்கிறீர்களா? நீங்கள் இதற்கு முன்பு நடித்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு துரைமுருகன், ஆம் நான் நன்றாக நடிப்பேன். சிறு வயதில் இருந்தே நாடகத்தில் நடித்து இருக்கிறேன். பின் நடிப்பதை விட்டுவிட்டேன். நான் நடிப்பதை தொடர்ந்து இருந்திருந்தால், ஒருவேளை சினிமாவில், ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன் என்று கூறினார்.
அவரின் இந்த பதிலை கேட்டு அவை மொத்தமும் சிரிக்க தொடங்கியது. துரைமுருகனும் சிரித்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications