சேரி பிஹேவியர் பேச்சு.. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்.. களத்தில் குதித்த கிருஷ்ணசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'சேரி பிஹேவியர்' எனக் கூறப்பட்ட விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிசென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி ரகுராம், உரையாடல் ஒன்றின்போது, 'சேரி பிஹேவியர்' என தெரிவித்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

வன்கொடுமை சட்டத்தின்கீழ் காயத்ரி மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

மன்னிப்பு கேட்கவில்லை

மன்னிப்பு கேட்கவில்லை

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரும், முன்னணி நடிகருமான கமல்ஹாசன், காயத்ரி பேசிய வார்த்தைக்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றிவிட்டார்.

நியாயப்படுத்திய கமல்

நியாயப்படுத்திய கமல்

தெருவில் இதைவிட மோசமாக பேசுகிறார்கள், ஜாதி இன்னும் நாட்டில் உள்ளது, ஜாதி பற்றி யார்தான் பேசவில்லை.., இப்படியெல்லாம் கமல் பேட்டியளித்து மறைமுகமாக காயத்ரி பேச்சுக்கு நியாயம் கற்பித்துவிட்டார்.

திட்டமிட்ட நாடகம்

திட்டமிட்ட நாடகம்

இதனிடையே, சென்னையில் நிருபர்களிடம் இன்று கிருஷ்ணசாமி கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசுவது, எதேச்சையாக நடந்தது இல்லை. திட்டமிட்டு கதை எழுதி 10 நாட்கள் நடித்துள்ளனர்.

போராட்டம்

போராட்டம்

சேரி பிஹேவியர் என்ற பேச்சுக்காக, கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் தேசிய மகளிர் ஆணையம், கமலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே கிருஷ்ணசாமி மூலம் கமலுக்கு நரெுக்கடி அதிகரித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If Kamal doesn't apologizes for Biggboss, we will stage agitations acrosss Tamilnadu, says Krishnaswamy.
Please Wait while comments are loading...