For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சின்னம்மா" இல்லாட்டி ஒன்னுமே இல்லைங்க... தங்கத் தமிழ்ச்செல்வன் தடாலடி!

சசிகலா இல்லையென்றால் முதல்வர் பழனிசாமி அரசே கிடையாது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளதாகவும், சசிகலா இல்லையொன்றால் இந்த அரசே கிடையாது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியே முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் அளித்தனர். இதனையடுத்து சென்னை அடையாறில் உள்ள வீட்டில் டிடிவி. தினகரனை சந்திதனர். அதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசியதாவது : ஆளுநரிடம் 19 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம், சசிகலா இல்லையெனில் தற்போதைய அரசு இல்லை.

Thangatamizhselvan

முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து கொண்டு அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். சட்டசபையில் 6 மணிநேரம் பசியும் பட்டினியுமாக இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினோம். இந்த அரசை ஊழ்ல் அரசு என்று சொன்னவர் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைத்தவர்.

இரட்டை இலை சின்னத்தை முடக்கிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதற்காக துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான அவசியம் என்ன?, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் எந்த பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இல்லை.

English summary
If Sasikala not selected Palanisamy as a CM there is no EPS government now says TTv. Dinakaran supporting MLA Thangatamizhselvan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X