ஓபிஎஸ் நடிகர்னா ஜெ.வுக்கு அவர் தானே வாரிசாக வந்திருக்க வேண்டும்.. ராமதாஸ் செம!
ஓபிஎஸ் நடிகர் என்றால் நடிகை ஜெயலலிதாவுக்கு அவர் தானே வாரிசாக வந்திருக்க முடியும் பாமக நிறுவனர் ராமதாஸ் நக்கலடித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதுப் போல் ஓபிஎஸ் சிறந்த நடிகர் என்றால் நடிகை ஜெயலலிதாவுக்கு அவர் தானே வாரிசாக வந்திருக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நக்கலாக கேட்டுள்ளார். சட்டசபையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆஸ்கர் நடிகர் என கூறியதற்கு ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அமைச்சர் ஜெயகுமார் ஜெயலலிதாவின் சமாதிக்கு ஏன் பட்ஜெட் அறிக்கையுடன் சென்றார் என்பது குறித்து திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது திமுக உறுப்பினர் உதயசூரியன், அண்ணா கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வந்த காட்சியை பார்த்திருக்கிறோம்.
ஓ.பன்னீர்செல்வம் வந்த போதும் பார்த்திருக்கிறோம். எல்லோரும் சதாரணமாக எடுத்து வந்த உரையை வாசித்துள்ளனர் என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் நடிப்பில் சிவாஜிகணேசனையே மிஞ்சிவிடுவார் என்றார்.

ஓபிஎஸ் ஆஸ்கர் நடிகர்
ஓபிஎஸ் ஆஸ்கர் நடிகர். அவர் அளவுக்கு நாங்கள் ஆஸ்கர் விருது வாங்கும் நடிகர் இல்லை என்றார். அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

மாஃபா, செம்மலை எதிர்ப்பு
அதேநேரம் அவரின் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றனர்.

ஜெயக்குமாரின் சைகை
ஆனால் அதனை சபாநாயகர் ஏற்கவில்லை.இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்களும் ஜெயகுமார் பேசியது தவறு எனக்கூறினர். அதற்கு ஜெயக்குமார் இதுதான் திமுக,ஓபிஎஸ் கூட்டணி என்பது போல் சைகை காட்டினார்.
|
நக்கலாக விமர்சனம்
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் நிகழ்வுகளை ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நக்கலாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஜெ.வாரிசு ஓபிஎஸ் தானே
ஓபிஎஸ் ஆஸ்கர் நடிகர் என கூறிய அமைச்சர் ஜெயக்குமாரையும் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவு மூலமாக நக்கலடித்துள்ளார். ஒருவேலை ஜெயக்குமார் கூறுவது போல் ஓ.பன்னீர் செல்வம் நடிகர் என்றால் நடிகை ஜெயலலிதாவுக்கு வாரிசாக அவர் தானே வந்திருக்க வேண்டும் என ஜெயக்குமாரிடம் நக்கலாக கேட்டுள்ளார் ராமதாஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications