பாமக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது: திருமா
சென்னை: பாமக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறாது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மணலி நியு டவுன் நாப்பாளையத்தில் மிஸ்டர் இந்தியா ஜிம் கிளப் சார்பில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று இரவு நடந்தது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
அப்போது திருமாவளவனிடம், ‘நீங்கள் எந்த கூட்டணியில் இடம் பெறுகிறீர்கள்' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என அவர் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘பா.ம.க. அணிக்கு விடுதலை சிறுத்தைகள் வந்தால் சேர்த்து கொள்வதாக பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளாரே' என செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, ‘பா.ம.க. இருக்கும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறாது' என திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications