டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் வெடிகுண்டு… வெடிச்சிருந்தால் 3 கி.மீ. தூரம் ‘அவுட்’.. மக்கள் பீதி

அரசு டாஸ்மாக் குடோனுக்கு சென்ற மதுபான சரக்கு லாரியில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடித்தால் 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்தும் தடைமட்டமாகும் என்று போலீசார் தெரிவித்துள

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அரசு மதுபான குடோனுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரியில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் விளமல் பகுதியில் அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகிறது. கோவை மதுபானத் தொழிற்சாலையில் இருந்து இந்த குடோனுக்கு மதுபான பாட்டில்கள் ஏற்றி செல்லப்பட்டன.

If the bomb explodes, 3 km will be destroyed in Tiruvarur

மதுபான சரக்குப் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த போது லாரியில் வெடிகுண்டு இருப்பதை பணியாளர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புகார்

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியை ஓட்டி வந்த மோகன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதில் மோகன் சென்னையை அடுத்த எண்ணுரை சேர்ந்தவர் என்பதும், ராஜ்குமார் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

3 கி.மீ. அவுட்

கண்டெடுக்கப்பட்ட வெடிக்குண்டை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இந்த குண்டு வெடித்தால் சுற்றியுள்ள 3 கி.மீ. தூரத்திற்கு ஒன்றும் இல்லாமல் தரைமட்டமாகி இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரிவாள்

மேலும், மதுபாட்டில் சரக்கு ஏற்றி வந்த லாரியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். ஆயுதங்களை அப்புறப்படுத்திய போலீசார், திருவாரூரில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடத்த யாராவது திட்டமிட்டிருந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

பீதி

இதனைத் தொடர்ந்து மதுபான குடோனில் வெடிகுண்டு சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்புக் காணப்படுகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+