தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்!
சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்றும் வேறு யாராவதாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி.பார்த்திபன், முன்னாள் எம்.பி சையதுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினகரனிடம் பேசக்கூடாது
கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
தினகரனிடம் பேசக்கூடாது என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். தினகரனுடன் தொடர்பில் உள்ளீர்களா என்றும் ஜெயலலிதா தன்னிடம் அடிக்கடி கேட்டு வந்தார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

நீங்களாவது விசுவாசமாக இருங்கள்
தான் உயிருடன் இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என ஜெயலலிதா கூறியிருந்தார் என்றும் அவர் கூறினார். நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று ஜெயலலிதா தன்னிடம் கூறினார் என்றும் தெரிவித்தார்.

தோற்கடிக்க சதி
2016ஆம் ஆண்டு தேர்தலில் சசிகலா குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தான் ஜெயலலிதா தனக்கு சீட் கொடுத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேர்தலில் தன்னை தோற்கடிக்க தினகரன் உள்ளிட்டோர் சதி செய்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

மீண்டும் டீ கடையில்
ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த காரணத்தினாலேயே சசிகலா குடும்பம் தன்னை துரோகி என கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் தன்னை டீ கடையில் அமர வைப்பதாக தினகரன் பேசி வருகிறார் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

உடுத்திய உடையோடு
தேர்தலில் தோற்கடித்து உடுத்திய உடையோடு வீட்டிற்கு அனுப்புவேன் என சசிகலா கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார். சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என்ற ஓ.பன்னீர்செல்வம் கோபம் வரும்போது மீதியயை கூறுவேன் என்றார்.

தற்கொலை செய்திருப்பார்கள்
தான் முதல்வராக இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்றும் வேறு யாராவதாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார். கட்சி நலனுக்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications