நிம்மதியா வாழனும்னா திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க... இது குஷ்பு பேச்சு
சென்னை: நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என்றால் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு பேசியுள்ளார்.
மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறனை ஆதரித்து நேற்று குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போதுதான் இப்படிப் பேசினார்.
குஷ்பு பேச்சிலிருந்து...

எல்லோரிடமும் செல் இருக்கா
தயாநிதி மாறன் சாதனையால் இன்று எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் இந்த புரட்சியை ஏற்படுத்தியவர்.

செய்ததால்தான் 2 தடவை
பல சாதனைகளை செய்ததால்தான் 2 தடவை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது மூன்றாவது தடவையாக சாதனைகள் செய்ய உங்கள் முன் நிற்கின்றார்.

3 ஆண்டுகளில் அதிகரித்த மின்தடை
அதிமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மின்சார தடை அதிகமாக உள்ளது. பல இடங்களில் 10 மணி நேரம், 12 மணி நேரம் கிராமப்புறங்களில் 16 மணி நேரம் வரை மின் தடை இருக்கிறது.

வர்றப்ப சொன்னது என்னாச்சு
ஆட்சிக்கு வரும்போது மின் தடையை நீக்குவோம் என்று சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது வாழ்க்கையே இருண்டு கிடக்கிறது.

தண்ணீர்ப் பிரச்சினை கடுமை
தண்ணீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் இலவச குடிநீர் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள்.

10 ரூபாய்க்கு விற்கிறார்கள்
ஆனால் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.10-க்கு விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். தாழ்த்தப்பட் டவர்களுக்கு இலவச குடியிருப்பு கட்டி கொடுத்தவர் கலைஞர்.

நிம்மதியா இருக்கனும்னா...
உங்களுக்காக சிந்திக்கின்ற ஒரே தலைவர் கலைஞர். உங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். தி.மு.க. ஆட்சியில் மக்கள் பயம் இல்லாமல் இருந்தார்கள். இப்போது வீட்டை விட்டு வெளியே நிம்மதியாக போக முடியவில்லை.

முற்றுப் புள்ளி வையுங்கள்...
இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். எதுவுமே செய்யாத உங்களுக்கு எதற்கு ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளே எதை நிறைவேற்றினீர்கள். மின்சாரம், தண்ணீர் தாராளமாய் கிடைக்கும் என்று சொன்னீர்களே, செய்தீர்களா என்றார் குஷ்பு.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications