சென்னை ஐ.ஐ.டி முன்பு தடையை மீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்.. மாணவர் அமைப்பினர் கைது
ஐஐடி வளாகம் முன்பு தடையை மீறி மாட்டிறைச்சியை சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் 30 பேர் போலீசாரல் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தடையை மீறி மாட்டிறைச்சியை சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் போலீசாரல் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆய்வு மாணவர் சூரஜை, சென்னை ஐஐடி-யில் பயிலும் மற்றொரு பிரிவினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சூரஜின் வலது கண் கடுமையாக காயம் அடைந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் மாணவர் சூரஜை தாக்கியவர்களை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கேம்பஸ் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா மாணவ அமைப்பினர் தடையை மீறி மாட்டிறைச்சி உண்டும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்ப்டடுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து ஐ.ஐ.டி.வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications