மெடிக்கல் சீட் மோசடி புகார்... வேந்தர் மூவிஸ் மதனின் நெருங்கிய நண்பர் கைது
திருச்சி: எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வேந்தர் மூவிஸ் மதனின் நெருங்கிய நண்பரும் இந்திய ஜனநாயக கட்சியின் மருத்துவ அணி செயலாளராருமான பார்க்கவன் பச்சமுத்து திருச்சியில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாக வேந்தர் மூவிஸ் மதன் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து மதன் தலைமறைவாகி உள்ளார். அவர் தலைமறைவானதிலிருந்து அவர் குறித்து ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவை உண்மையா பொய்யா என தெளிவுபடுத்தக் கூட யாருமில்லை. எஸ்ஆர்எம் பாரிவேந்தரோ, மதனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும், மதன் ஒரு மோசடிப் பேர்வழி என்றும் கூறிவிட்டார்.
இந்நிலையில், மதனின் நெருங்கிய நண்பரும், திருச்சியை சேர்ந்த மருத்துவருமான பார்க்கவன் பச்சமுத்து என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.10 பேரிடம் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி 8 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து விசாரணையில் ஈடுபட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் பார்க்கவன் பச்சமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் பார்க்கவன் பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மருத்துவ அணி செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications