இல.கணேசன், எச். ராஜா வேட்பு மனு தாக்கல்!
சென்னை: தமிழக லோக்சபாதேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதேபோல காங்கிரஸ் தரப்பிலும் மனுத்தாக்கல் நடந்துள்ளது.
தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தேசிய தலைவர் இல.கணேசன் இன்று காலை கட்சியினர் புடை சூழ செனறு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அதேபோல சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாராமனிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
2 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் தொடங்கியுள்ள மனுத் தாக்கலில் இன்றும் நிறைய சுயேச்சைகள் தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
நெல்லையில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தென்காசி தொகுதி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் மனுத்தாக்கல் செய்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரியிடம், சதன் திருமலைக்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நெல்லையில் சிவனனைந்த பெருமாளும், தென்காசியில் மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications