நரேந்திர மோடிக்கு ரஜினி ஆதரவு....நம்பிக்கை வீண் போகாது! - இல கணேசன்
சென்னை: நரேந்திர மோடிக்கு ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என்ற எங்களின் நம்பிக்கை வீண் போகாது என பாஜக செயற்குழு உறுப்பினர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வரும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் 64-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சென்னையிலும் பா.ஜ.க.வினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

ரஜினி ஆதரவுப் பேச்சு
அப்போது 'நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிப்பார் என்பது போன்ற செய்திகள் திடீரென்று பரவலாக வெளிவந்துள்ளதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பினர்.

பெரிய கூட்டம் உள்ளது
அதற்கு இல கணேசன் பதிலளிக்கையில், "ரஜினிகாந்த் நடிப்பு துறையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட, அதற்கு அப்பாற்பட்டு அவருடைய வார்த்தைகளை மதிக்கின்ற ஒரு பெரிய கூட்டம் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருக்கிறது என்பது உண்மை.

ரஜினி தேசியவாதி
ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். ஆனால் அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி. நாட்டின் நலன் குறித்து அக்கரைபடுபவர். யாரெல்லாம் நாட்டின் நலன் குறித்து அக்கரைப்படுகிறார்களோ? அவர்களெல்லாம் இன்றைய பாரதத்தின் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். அந்த வகையில் நாட்டின் நலன் கருதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றம் தேவை என கருதி மோடிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்பது தான் அவரை புரிந்து கொண்டவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை.

நம்பிக்கை வீணாகாது
நரேந்திர மோடியின் இந்த பிறந்த நாளையொட்டி பத்திரிகை மூலமாக மக்கள் உணர்வுகளை ரஜினிக்கு தெரியப்படுத்துவதற்கு கிடைத்திருக்கிற வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன்.
எனது நம்பிக்கையும், தேச பக்தர்களது நம்பிக்கையும் வீணாகாது என நான் கருதுகிறேன்," என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications