குழந்தையாக இருந்தபோதே பிரபலமானவர், திறமையானவர் ஸ்ரீதேவி.. இளையராஜா
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தற்போது இசையமைப்பாளர் இளையராஜா பேசி இருக்கிறார். அதில் ஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகுக்கு இழப்பாகும் என்றுள்ளார்.
மேலும் ''ஸ்ரீதேவியின் அதிக படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். பாலசந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல இயக்குனர்கள் ஸ்ரீதேவியிடம் இருந்த திறமையை வெளியே கொண்டு வந்தார்கள். ஸ்ரீதேவியிடம் திறமை இருந்தது, அதனால்தான் அது சத்தியம் ஆனது'' என்றுள்ளார்.
மேலும் ''குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலேயே ஸ்ரீதேவியை அறிவேன். லவகுசா படத்திற்கு இசையமைக்கும் பொது ஸ்ரீதேவியை அருகில் பார்த்தேன., குழந்தை நட்சத்திரத்திலேயே மிகவும் பிரபலமான நபராக இருந்தார். ஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகுக்கு இழப்பாகும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications