'அண்ணா.. சாப்பிடுங்க..' மருத்துவமனையில் எம்எஸ்விக்கு உணவு ஊட்டிய இளையராஜா!
உடல் நலமில்லாமல் மருத்துவமனையிலிருக்கும் மூத்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனை நேரில் சென்று சந்தித்த இளையராஜா, அவருக்கு தன் கையால் உணவு ஊட்டினார்.
மெல்லிசை மன்னர் என்று புகழப்படும் எம்எஸ் விஸ்வநாதன் கடும் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. நேற்று மாலை அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் இளையராஜா.
அப்போது எம்எஸ்வி சாப்பிட மறுப்பதாகவும், பிற்பகலிலிருந்து எது கொடுத்தாலும் வேண்டாம் என சொல்வதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
உடனே இளையராஜா எம்எஸ்வியின் அருகில் போய், "அண்ணா, சாப்பிடுங்கள்... நீங்க சீக்கிரம் எழுந்து வரணும்," என்றார். ஆனால் எம்எஸ்வியோ, "எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க சாப்பிடுங்க ராஜா," என்று சைகையில் கூறினார்.
அதற்கு இளையராஜா, 'சரி, நான் சாப்பிடறேன். அப்ப நீங்களும் சாப்பிடுவீங்களா?' என்று கேட்டதும், சரி சாப்பிடுகிறேன் என்றார் எம்எஸ்வி.
உடனே அங்கிருந்தவர்களிடம் கூறி இருவருக்கும் உணவு கொண்டு வரச் சொன்னார்கள். எம்எஸ்விக்காக கொண்டுவரப்பட்ட உணவை, இளையராஜா வாங்கி, தன் கையாலேயே அவருக்கு ஊட்டிவிட்டார். சிறிதளவு உணவு உட்கொண்ட பிறகு, போதும் என்று எம்எஸ்வி சொல்லிவிட்டார்.
இளையராஜா அங்கிருந்து கிளம்பும்போது, "அண்ணா சீக்கிரம் குணமாகி நம்ம ஸ்டுடியோவுக்கு வாருங்கள். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்," என்று கூறிவிட்டு வந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications