பெங்களூரு விமான நிலைய சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் - இளையராஜா
சென்னை: விமான நிலையங்களில் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான். பெங்களூரு விமான நிலையத்தில் நடந்ததை பெரிது படுத்த வேண்டாம் என இசையமைப்பாளர் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா மங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இளையராஜாவை தடுத்து நிறுத்திய அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, பையில் தேங்காய், விபூதி போன்ற பிரசாதப் பொருட்கள் இருந்ததால், அவற்றை அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, பிரசாதப் பொருட்களை அங்கேயே விட்டுச் செல்ல அதிகாரிகள் நிர்ப்பந்தித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த இளையராஜா, பிரசாதப் பொருட்களை விட்டுச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இளையராஜாவை அங்கிருந்த அதிகாரிகள் காத்திருக்க வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து இளையாராஜா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், விமான நிலையங்களில் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். இதை விட கடுமையான பிரச்சினைகளை எல்லாம் நான் சந்தித்து இருக்கிறேன். அதிகாரிகள் அவர்களின் பணியை செய்தார்கள். நான் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
என்னை சோதனை செய்து காத்திருக்க வைத்ததால் நான் ஒன்றும் சிறுமை அடையவில்லை. நான் எப்பவும் ராஜா தான். எனவே இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று இளையராஜா கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications