ஜெயாடிவி நிர்வாகத்தை சார்ஜ் எடுத்த இளவரசி மகன் விவேக்- ஆட்டம் ஆரம்பம்!
ஜெயாடிவி நிர்வாகத்தை இளவரசி மகன் விவேக் கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயாடிவியை ஆரம்பத்தில் இருந்தே டிடிவி தினகரன் மனைவி அனுராதாவும், அவரது தங்கை பிரபாவும்தான் கவனித்து வந்தனர். தற்போது இளவரசி மகன் விவேக் நிர்வாகத்தின் ஜெயா டிவி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் உள்ள இளவரசி சசிகலாவை கடந்த சில தினங்களுக்கு பார்க்க சென்ற விவேக்கிடம் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் சசிகலா. அதில் முக்கியமானது,
ஜெயா டிவி இனி அனுராதா எந்தக் காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது என்பதுதானாம்.
ஜெயாடிவி நிர்வாகத்தை விவேக் அவரது மனைவி கீர்த்தனா கவனித்துக்கொள்ளட்டும் என்றும் சசிகலா கூறவே உடனடியாக சார்ஜ் எடுத்துக்கொண்டாரம் விவேக்.

சகோதரிகள் அவுட்
ஜெயாடிவி தொடங்கியதில் இருந்தே டாக்டர் வெங்டேஷின் சகோதரிகள் அனுராதாவும், அவருக்கு பின்னர் பிரபா சிவக்குமாரும்தான் கவனித்து வந்தனர். அனுராதா டிடிவி தினகரனின் மனைவி, பிரபா, பிரபல டாக்டர் சிவகுமாரின் மனைவியாவார்.

ஜெயலலிதாவின் பாசம்
அனுராதா, டிடிவி தினகரனை வீட்டை விட்டு விரட்டினாலும் பிரபா, சிவகுமாருக்கு போயஸ்கார்டனின் எப்போதுமே அனுமதி உண்டு. ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்துக் கொண்டதில் முக்கிய பங்கு சிவகுமாருக்கு உண்டு.

ஜெயா டிவி
அதிமுகவில் டிடிவி தினகரன் ரீ என்ட்ரி ஆன பின்னர் அனுராதா மீண்டும் ஜெயாடிவிக்கு வரத் தொடங்கி விட்டாராம். எனவேதான் அனுராதா, பிரபா சகோதரிகளை கழற்றி விட சொல்லியிருக்கிறாராம் சசிகலா.

விவேக் ஆட்டம்
ஜெயா டிவி நிர்வாகத்தை விவேக் கையில் எடுத்து விட்டதாக தெரிகிறது. ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகியை போயஸ் தோட்டத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். அவரிடம், இனி நிர்வாக ரீதியாக எந்த முடிவெடுப்பதானாலும் என்னையோ கீர்த்தனாவையோ கேட்காமல் செய்யக் கூடாது என்று சொன்னாராம்.

நாங்கள் வைத்ததே சட்டம்
நானும், கீர்த்தனாவும் மட்டும்தான் நிர்வாக இன்சார்ஜ், அவங்க சொன்னாங்க.. இவங்க சொன்னாங்கன்னு எதையும் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் எங்களோடு நேராக பேசுங்க என்று அதிரடியாக உத்தரவுகளைப் பிரப்பித்து இருக்கிறார் விவேக்.

படிப்படியாக
ஜெயாடிவி மட்டுமல்லாது கட்சியில் இருந்து டிடிவி தினகரனை மொத்தமாக கழற்றி விட்டு விட திட்டமிட்டிருக்கிறாராம் சசிகலா. விரைவில் சசிகலாவிடமிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். அதில் அதிமுகவில் விவேக்கிற்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications