60 நாட்கள்தான் எடப்பாடி ஆட்சி... சீக்கிரம் ஆட்டைய போடனும்... பெங்களூரு சிறைக்குள் அரங்கேறும் 'சதி'
எடப்பாடி அரசு எத்தனை நாளைக்கு நீடிக்குமோ என்கிற நிலையில் இளவரசி மகனுக்கு அதிமுகவில் சசிகலா முக்கியத்துவம் தர இருக்கிறராம்.
சென்னை: எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு அதிகபட்சம் 60 நாட்கள்தான் நீடிக்கும்...அதற்குள் 'முடிக்க' வேண்டிய காரியங்களை முடித்தாக வேண்டும் என பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே கடந்த சில நாட்களாக இளவரசி மகன் பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக அரசு அஸ்தமனத்தை நோக்கி பயணிப்பதாகவே தெரிகிறது. ஆளும் கட்சியில் திசைக்கு ஒரு கோஷ்டியாக எம்.எல்.ஏக்கள் அணிசேர்ந்துள்ளனர்.

ஆட்டி படைக்கும் டெல்லி
தினம் தினம் ஒரு கோஷ்டி என அதிமுகவை டெல்லி ஆட்டி படைத்து வருகிறது. அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலாவும் தினகரனும் பெங்களூரு, டெல்லி திகார் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசி கோஷ்டி மும்முரம்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எத்தனை நாளுக்குத் தாக்குப் பிடிக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே அதிமுக அரசு கவிழ்வதற்குள் அரசாங்க சொத்துகளை சூறையாடிவிட வேண்டும் என்பதில் சசிகலா கோஷ்டி படுதீவிரமாக இருந்து வருகிறது.

திவாகரன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலாவின் தம்பி திவாகரன் பெங்களூரு சென்றிருந்தார். சசிகலாவிடம் மகனுக்கு அதிமுகவில் பதவி தர வேண்டும் என சண்டை போடவே திவாகரன் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் திவாகரனை சசிகலா சந்திக்கவில்லை.

பெங்களூருவில் விவேக்
அதேநேரத்தில் இளவரசி மகன் விவேக்கை வரவழைத்திருக்கிறார் சசிகலா. விவேக் சனிக்கிழமை முதல் பெங்களூருவில்தான் தங்கியுள்ளார். அதிமுக அரசு கவிழ்வதற்குள் கட்சியை மீண்டும் கட்டுப்பாட்டில் எடுக்கவும் ஆட்சியில் சுருட்டவுமான சதித் திட்டங்களை நிறைவேற்றவே விவேக்கை சசிகலா அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் வரைதான் அதிமுக அரசு தாங்கும் என கூறப்படும் நிலையில் சசிகலா வகுக்கும் வியூகங்கள் அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பலாம் என்றே கூறப்படுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications