இளையராஜாவின் 73ஆவது பிறந்தநாள்... உற்சாகமாகக் கொண்டாடும் ரசிகர்கள்: வீடியோ
இளையராஜாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் மேஸ்ட்ரோ மியுசிக் நிறுவனமும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது.
சென்னை: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் மண்ணின் இசையை மீட்டுருவாக்கம் செய்த இசையின் ராஜா இளையராஜாவின் பிறந்தநாளை அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் மேஸ்ட்ரோ மியுசிக் நிறுவனமும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 73ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் மேஸ்ட்ரோ மியுசிக் நிறுவனமும் இன்று காலையிலிருந்து மிகுந்த சந்தோஷத்துடனும் குதூகலத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.

தென் தமிழகத்தின் மூலையில் உள்ள பண்ணையபுரம் என்ற சிறு கிராமத்தில் பலரின் உள்ளாங்களைத் தன் இசையால் இன்றளவும் கவர்ந்துகொண்டிருக்கும் ராசையா என்கிற இளையராஜா ஜூன் 3ஆம் நாள், 1943ஆம் ஆண்டு பிறந்தார். கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி என்பதால் அவர் மீதான பற்றினால் ஜூன் 2ஆம் தேதி கொண்டாடி வருகிறார்.
தன் சுய முயற்சியால் ஆர்மோனியம்,கிடார் ஆகிய இசைக்கருவிகளை இசைப்பதில் நிபுணத்துவம் பெற்றார். 1961 லிருந்து 1968ஆம் ஆண்டு வரை தன் சகோதரகள் பாவலர் வாரதாரஜன், கங்கை அமரன் ஆகியோருடன் நாடு முழுவதும் சுற்றி பல ஆயிரம் கச்சேரிகளைச் செய்து வந்தார்.
காடு மேடு அலைந்து இன்னிசை அளித்து வந்த இளையராஜா,1976ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் உலகின் இசை ராஜாவாக உருவெடுத்தார். அதுவரை தமிழகத்தின் வானொலிகளில் இந்தி இசை மட்டுமே கேட்கப்பட்டு வந்த காலத்தை அன்னிக்கிளி திரைப்பட பாடல்கள் மூலம், பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இன்றும் பட்டிதொட்டியெங்கும் ராஜாவின் பாடல்களே ராஜாங்கம் செய்கிறது.
இளையராஜா ஃபேன்ஸ் கிளப் என்ற முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு அதில் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்துகொண்டுள்ளார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications