கோடிக்கணக்கில் யார் சுரண்டுகிறார்கள், கொடுக்கப்பட்ட லஞ்சம் எவ்வளவு?, அதிமுக அரசு வெட்கப்பட வேண்டாமா?
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள் சிலவற்றை குறிப்பிட்டு சுரண்டுவது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மின்துறை அமைச்சர் திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்களே,

காற்றாலை மின்சாரம் ஒரு யூனிட் ரூபாய் 3.10 பைசா தான். பருவ காலத்தில் தமிழகத்தில் 7000 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மின்சாரத்தை வாங்குவதற்குப் பதில் மின்சாரத்துறை அமைச்சர் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளீரே? உடன்குடி மின் திட்டத்தை நான்கு வருடங்களாக நீங்களும் முன்பு மின்வாரியத் தலைவராகவும் தற்போது தலைமை செயலாளராகவும் உள்ள ஞானதேசிகனும் நிறைவேற்ற காலம் கடத்தினீர்களே, தனியாரிடம் அதிக விலை மின்சாரம் வாங்குவதற்கா? இதன் மூலம் அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பகற்கொள்ளையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை, யார் சுரண்டுகிறார்கள்?
சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. வளர்மதி அவர்களே,
ஒரு முட்டையின் சில்லரை விலை 3 ரூபாய்க்கு குறைவாவே உள்ளது. ஆனால் சத்துணவுத் திட்டத்திற்கு மொத்த விலையில் ஒரு முட்டை ரூபாய் 4.51 பைசாவிற்கு வாங்குகிறீர்களே? இதன் மூலம் அரசுக்கு 138 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, இதில் ஊழல் எவ்வளவு? குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் அளிக்கப்படும் சத்துணவில் கூட ஊழல் செய்யும் அ.தி.மு.க. அரசு வெட்கப்பட வேண்டாமா?
முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களே,
1,00,000 கோடி ரூபாய் அளவிற்கு தாது மணல் கொள்ளையில் வி.வி.மினரல் என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட கதிர்வீச்சு பொருள்களை இந்த நிறுவனம் கையாள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய சட்டங்கள் அனைத்தையும் மீறி பெயர் தெரியாத வெளிநாடுகளுக்கு தாது மணல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் முதல்வர் திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களே? முதல்வருக்கு இந்த நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலை இல்லையா? சட்டவிரோதமாக தாதுமணல் அள்ள, ஏற்றுமதி செய்ய கொடுத்த அனுமதிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் எவ்வளவு? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications