சட்டவிரோத சாராய விற்பனையை வீடியோ எடுத்தவரின் மண்டை உடைப்பு... 5 பேர் கைது
சட்டவிரோதமாக சாராய விற்பனையை வீடியோ எடுத்தவரின் மண்டை உடைக்கப்பட்டதை தொடர்ந்து சாராய வியாபாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

விழுப்புரம்: சட்டவிரோதமாக சாராய விற்பனை நடப்பதை படம் பிடித்த 2 பேர் மீது சாராய வியாபாரிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் பிரபல சாராய வியாபாரி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே ரெட்டனை சங்கராபரணி ஆற்று மேட்டுப் பகுதியில் சாராயம் விற்பனை நடந்து வந்தது. இதை அதே கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் சுகுமார் ஆகிய 2 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

இதனைக் கண்ட சாராய வியாபாரிகள், அந்த இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில், சுதாகர் மற்றும் சுகுமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனிடையே அவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது.
இதையடுத்து, பெரியத்தச்சூர் உதவி காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலான போலீஸ், அந்த வீடியோவை வைத்து, பிரபல சாராய வியாபாரி திண்டிவனம், தீர்த்தக்குளத்தைச் சேர்ந்த மரூர், ராஜா,சந்தோஷ், வீரமுத்து உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications