போட்டுத் தள்ளு.. போய்க்கிட்டே இரு... சென்னையை உலுக்கும் கள்ளக்காதல் கொலைகள்!
சென்னை: அன்பே ஆருயிரே.. இனி நாம் ஈருடல் ஓருயிர்... நீ தான் நான்.. நான்தான் நீ.. என்று காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனம் பேசியதெல்லாம் அந்தக் காலம் பாஸ்.. இப்போதெல்லாம் கள்ளக்காதலுக்காக போட்டுத் தள்ளி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஆண்களும், அவர்களுக்குச் சமமாக பெண்களும்.
சென்னையில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆண்களை பெண்கள் போட்டுத் தள்ளுவதும் சமமான அளவில் அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து கள்ளக்காதல் கொலைகள் சென்னையில் அதிகரித்து வருகின்றன. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் பலரும் இதில் செத்துப் போயுள்ளனர்.

முக்கால்வாசி கள்ளக்காதல்தான்
சென்னையில் நடைபெறும் கொலைகளில் பெரும்பாலானவை அதாவது 90 சதவீத சாவுகள் கள்ளக்காதல் தொடர்பானவை என்று போலீஸ் புள்ளிவிவரம் கூறுகிறது.

கசக்கும் உறவுகள்
கள்ளக்காதல் தொடர்பாக குடும்பத்தில் பிளவு, பிரச்சினை, சொத்துத் தகராறு உள்ளிட்டவை ஏற்பட்டு கடைசியில் அது கொலையில் போய் முடிகிறது.

கூலிப்படைகளுக்குக் கொண்டாட்டம்
இதுபோன்ற கள்ளக்காதல் கொலைகளில் பெரிய அளவில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு சரமாரியாக இவர்கள் கொலைகளைச் செய்து குவிக்கிறார்கள்.

2014ல் 90 பலி
2014ம் ஆண்டு சென்னையில் மொத்தம் 141 கொலைகள் போலீஸாருக்கு ரிப்போர்ட் ஆகியுள்ளன. அதில் 90 பேர் கள்ளக்காதல் தொடர்பாக கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

2015ல் 91
அதேபோல 2015ம் ஆண்டு மொத்தக் கொலைகள் 129 ஆக குறைந்திருந்தன. ஆனால் கள்ளக்காதல் கொலை ஒன்று அதிகரித்து 91 ஆக இருந்தது.

இப்போது இதுவரை 50
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 65 கொலைகள் விழுந்துள்ளன. அதில் 50 பேர் கள்ளக்காதல் காரணமாக கொல்லப்பட்டவர்கள் என்பது அதிர வைக்கிறது.

வீட்டுக்குள் நடக்கும் கொலைகளே அதிகம்
கள்ளக்காதல் கொலைகளில் வெளியில் நடப்பதை விட வீட்டுக்குள் நடக்கும் கொலைகள்தான் அதிகமாக உள்ளது. கள்ளக்காதலிக்காக மனைவியைக் கொல்லும் கணவர்கள், கள்ளக்காதலர்களுக்காக கணவர்களைப் போட்டுத் தள்ளும் மனைவிகள், பெரும்பாலும் இரவு நேரங்களில் விஷம் கொடுத்தோ, தலையணையால் அமுக்கியோ கொலை செய்கிறார்கள்.

கவுன்சிலிங் தேவை
கள்ளக்காதலில் ஈடுபடுவது முன்பை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கணவர்களுக்குத் தெரியாமல் மனைவியரும், மனைவிக்குத் தெரியாமல் கணவரும் சகஜமாக ஈடுபட ஆரம்பித்து விட்டனர். இவர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் கொடுத்தால் இதுபோன்ற கொடூரக் கொலைகளை தடுக்க முடியும் என்று போலீஸாரும், சமூக நல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications